sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்குரு

/

இறைவனுடன் நெருங்கியிருப்பவர்

/

இறைவனுடன் நெருங்கியிருப்பவர்

இறைவனுடன் நெருங்கியிருப்பவர்

இறைவனுடன் நெருங்கியிருப்பவர்


ADDED : நவ 13, 2011 04:11 PM

Google News

ADDED : நவ 13, 2011 04:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்டியலில் காசு போட்டு விட்டான் என்பதற்காக கடவுள் ஒருவனைக் காப்பாற்றவும் மாட்டார். போடாததற்காக தண்டிக்கவும் மாட்டார்.

* எல்லாவற்றையும் கடவுள் செய்வார் என்று எதிர்பார்க்கும் குணம் கூடாது. நம் கடமையை நாமே செய்வது குறித்தும், எந்தச்சூழலில் வாழ்கிறோம் என்பது குறித்தும் அறியும் அறிவை இறைவன் நமக்கு தந்துள்ளதை மறக்கக்கூடாது.

* அமைதியாக இருப்பவர் இறைவனுக்கு நெருக்கமானவர். வீண் விவாதம், தேவையற்ற வாக்குவாதங்களில் அவர் ஈடுபடமாட்டார்.

* அன்பு, ஆனந்தத்தை பிறருக்கு கொடுக்கும் வாய்ப்பு ஒவ்வொரு விநாடியும் வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

* சில விஷயங்களில் நம் மனதில் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. எதிர்பார்ப்பு உண்டாகும் போது வாழ்வில் விருப்பு, வெறுப்பு தவிர்க்க முடியாததாகி விடும்.

* சாப்பாட்டின் முன் அமரும் போது, பரிமாறப்பட்டதை மகிழ்ச்சியோடும், நன்றியோடும் அன்போடும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

- சத்குரு ஜக்கி வாசுதேவ்



Trending





      Dinamalar
      Follow us